ADDED : ஜன 07, 2024 06:45 AM

மதுரை: தே.மு.தி.க., தலைவர்விஜயகாந்த் மறைவையொட்டி மதுரையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். யூ.சி., பள்ளியில் துவங்கிய ஊர்வலம் மேலமாசி வீதி- வடக்குமாசி வீதி சந்திப்பில் முடிந்தது. விஜயகாந்த் உருவ படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பாலசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, உயர்மட்டக் குழு உறுப்பினர் பாலன், விசாரணைக்குழு உறுப்பினர் அழகர்சாமி, மேயர் இந்திராணி பொன்வசந்த் (தி.மு.க.,), முன்னாள் அமைச்சர் உதயகுமார் (அ.தி.மு.க.,), துணைமேயர் நாகராஜன்(மார்க்சிஸ்ட்), தென்னிந்திய பா., பிளாக் தலைவர் திருமாறன் உட்பட பல்வேறு கட்சிகள்,அமைப்புகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.