/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சேதமடைந்த சாலையை தவிர்க்கும் வாகனங்கள் சேதமடைந்த சாலையை தவிர்க்கும் வாகனங்கள்
சேதமடைந்த சாலையை தவிர்க்கும் வாகனங்கள்
சேதமடைந்த சாலையை தவிர்க்கும் வாகனங்கள்
சேதமடைந்த சாலையை தவிர்க்கும் வாகனங்கள்
ADDED : மே 10, 2025 06:16 AM

சோழவந்தான் : பள்ளப்பட்டி - சோழவந்தான் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் ஒன்றரை ஆண்டுக்கு முன் கரட்டுப்பட்டி பெரியாறு பாசன கால்வாய் முதல் கருப்பட்டி அய்யனார்கோயில் வழியாக மதுரை மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ராட்சதகுழாய்கள் பதிக்கப்பட்டது. இதற்காக இடதுபுற ரோட்டில் தோண்டிய 'மெகா சைஸ்' பள்ளங்கள்மூடப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலை அமைத்த சில வாரங்களிலேயே பல இடங்களில் 4 கி.மீ.,க்கு தார் உரிந்தும், 2 அடி ஆழ குழிகள் உருவாகியும் சேதமடைந்தது. நெடுஞ்சாலை துறையின் தரமற்ற 'பேட்ச் ஒர்க்' பணியால் மீண்டும் சாலை சேதமானது. இதனால் வாகனங்கள் இடது புற சாலையை தவிர்த்து செல்கின்றன.
நாச்சிகுளம் கந்தசாமி கூறுகையில், ''முன்பைவிட அதிக இடங்களில் சாலை பழுதாகி அலை அலையாக மாறியுள்ளதால், விரையும் வாகனங்கள் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஏதேனும் ஒரு பக்கம் இழுத்துச் செல்கிறது. இதனால் இடது புறத்தை தவிர்த்து எதிர்திசையில் செல்வதால்விபத்து அபாயம் அதிகரித்துள்ளது'' என்றார்.