ADDED : ஜன 05, 2024 05:14 AM
மதுரை : தமிழகத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டதை தீவிர பேரிடராக அறிவித்து ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். லோக்சபா தேர்தலில் ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர்கள் சுடர்மொழி தீபம், வழக்கறிஞர் ரவிக்குமார், அரசமுத்துபாண்டியன், சிந்தனை வளவன் தலைமை வகித்தனர். தலைமை நிலைய முதன்மை செயலாளர் பாவரசு, கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாநில துணைச் செயலாளர் அய்யங்காளை உட்பட பலர் பங்கேற்றனர்.