ADDED : செப் 09, 2025 04:28 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை 151வது ஆண்டு, அற்புத ஜீவ ஊற்று 25ம் ஆண்டு என முப்பெரும் விழா, நற்கருணை ஆராதனை, கூட்டுத் திருப்பலி நேற்று மாலை திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரித்த தேர் பவனி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற பக்தர்கள் மழையில் நனைந்தவாறு ஊர்வலமாக சென்றனர். இன்று (செப்.9) காலை 6:30 மணிக்கு எஸ்.வி.டி பாதிரியார் ரமேஷ் தலைமையில் நற்கருணை ஆராதனையுடன் கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை எஸ்.வி.டி., அதிபர் ஆண்டனி வினோ, உதவிப் பாதிரியார் யூஜின், பக்தர்கள் செய்தனர்.