/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு ஊழியருக்கு இலவச சிகிச்சை; தடையின்றி கிடைக்க வலியுறுத்தல் அரசு ஊழியருக்கு இலவச சிகிச்சை; தடையின்றி கிடைக்க வலியுறுத்தல்
அரசு ஊழியருக்கு இலவச சிகிச்சை; தடையின்றி கிடைக்க வலியுறுத்தல்
அரசு ஊழியருக்கு இலவச சிகிச்சை; தடையின்றி கிடைக்க வலியுறுத்தல்
அரசு ஊழியருக்கு இலவச சிகிச்சை; தடையின்றி கிடைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2025 01:09 AM
மதுரை: 'அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரிகளில் என்.ஜி.ஓ., சான்றிதழை சமர்ப்பித்து அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இலவச சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனை கொடுக்காத ஊழியர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் வந்தபின்பு, அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை இருந்தால்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு சென்ற அரசு ஊழியர் குடும்ப உறுப்பினர் அளித்த என்.ஜி.ஓ., சான்றிதழை ஏற்காமல் முதலமைச்சர் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கினால் மட்டுமே இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியராக பணிபுரிவதால் அரசு விதிப்படி முதலமைச்சர் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்க இயலாது என காப்பீடு திட்ட நிர்வாகம் தெரிவித்தது. அரசு ஊழியர் காப்பீடு திட்டப்படி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து ஓராண்டு கடந்த பின்னும் அரசாணை அமலுக்கு வரவில்லை.
இதனால் அரசு ஊழியர் குடும்ப உறுப்பினர் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் நோயின் வலியுடன் அவதிப்படுகிறார். அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் வலியுறுத்தியுள்ளனர்.