/உள்ளூர் செய்திகள்/மதுரை/தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் திடீர் தர்ணா தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் திடீர் தர்ணா
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் திடீர் தர்ணா
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் திடீர் தர்ணா
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் திடீர் தர்ணா
ADDED : மே 20, 2025 10:34 AM

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி காரணமாக தெற்கு தெரு தனியார் இடத்தில் 15 நாட்களாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததோடு சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாவதாக மே 17ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
நேற்று தற்காலிக பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்த சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் ஆதரவாளர்களுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பெண் ஆதரவாளர்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் சகதியில் நாற்று நட்டனர். உதயகுமாரை நகராட்சி கமிஷனர் அசோக்குமார், போலீசார் சமரசம் செய்தனர்.
அவர் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்து 2019ல் அன்றயை முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். அரசாணையும் வெளியிடப்பட்டது. ரூ. 22.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போடப்பட்டது. பலமுறை சட்டசபையில் கேள்வி எழுப்பியும் பதில் தர மறுக்கிறார்கள் என்றார்.