/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஸ்டாலின் பேச்சுக்கு உதயகுமார் எச்சரிக்கை ஸ்டாலின் பேச்சுக்கு உதயகுமார் எச்சரிக்கை
ஸ்டாலின் பேச்சுக்கு உதயகுமார் எச்சரிக்கை
ஸ்டாலின் பேச்சுக்கு உதயகுமார் எச்சரிக்கை
ஸ்டாலின் பேச்சுக்கு உதயகுமார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 02, 2025 11:15 PM
மதுரை: மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறியதாவது: 'பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்' என திரைப்படத்தில் சொல்லுவார்கள். அதுபோல் முதல்வர் ஸ்டாலின் பேச்சு 'ஸ்ட்ராங்காக' இருக்கிறது. செயல் 'வீக்'காக இருக்கிறது. அவருக்கு எப்போதும் பழனிசாமி நினைவு தான். அதனால் மதுரை பொதுக்குழுவில் அவரை பற்றி ஆணவத்தின் உச்சமாக, நம்பிக்கை இழந்து, விரக்தியில், அதீத கற்பனையில் பேசியிருக்கிறார்.
தி.மு.க., பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை போட்டீர்கள். அதில் கச்சத்தீவை நீங்களே தாரைவார்த்து விட்டு மக்களை ஏமாற்றும் வகையில் தீர்மானம் போடுகிறீர்கள். '7வது முறையாக தி.மு.க., வெற்றி பெறும். 2வது முறையாக திராவிட மாடல் தொடரும்' என்று உங்கள் பேச்சு தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, 'நான் இதை மமதையுடன் பேசவில்லை' என ஆணவத்துடன் பேசி உள்ளீர்கள். அதன் உச்சமாக பழனிசாமியை நீங்கள் விமர்சித்தது அ.தி.மு.க., தொண்டர்களால் ஏற்கமுடியவில்லை. தொடர்ந்து இதுபோன்று ஆணவமாக, அகம்பாவமாக பேசினால் நாங்கள் போராட தயாராக இருப்போம். இவ்வாறு கூறினார்.