ADDED : செப் 20, 2025 04:13 AM
கள்ளிக்குடி: விருதுநகர் மாவட்டம் முனீஸ்வரன் 39, திருமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.
நேற்று காலை திருமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு டூவீலரில் சென்றார். மதுரையில் இருந்து சிவகாசிக்கு சென்ற லாரி கள்ளிக்குடி வீ.டி. மணி நகரம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியின் பின்புறம் முனீஸ்வரன் டூவீலர் மோதியதில் அவர் இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.