ஒத்தக்கடையில் மரக்கன்று நடும் விழா
ஒத்தக்கடையில் மரக்கன்று நடும் விழா
ஒத்தக்கடையில் மரக்கன்று நடும் விழா
ADDED : மே 26, 2025 02:20 AM
மதுரை: மதுரை ஒத்தக்கடை திருமோகூர் ரோடு நீலமேக நகரில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் வார மரக்கன்று நடும் விழா, பராமரிப்பு பணி நடந்தது.
பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் பாலமுருகன் வரவேற்க பரமேஸ்வரன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன், மரங்களின் பயன்கள், அதிகரிக்கும் வெப்ப நிலை, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து பேசினார்.
அப்பகுதி ரேஷன் கடை அருகே உள்ள மரங்கள் பராமரிக்கப்பட்டன. புங்கை மரக்கன்றுகள் நடப்பட்டன. உறுப்பினர் மலர்மங்கை நன்றி கூறினார். ஆலோசகர்கள் பாண்டி, ராகேஷ், உறுப்பினர்கள் கணபதி, ஸ்டெல்லா மேரி, கபிலன், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.