Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கருவூல மென்பொருளை மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கருவூல மென்பொருளை மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கருவூல மென்பொருளை மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கருவூல மென்பொருளை மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ADDED : செப் 07, 2025 10:48 AM


Google News
மதுரை: மதுரை ரவீந்திரநாத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட சதவீத தொகையை உரியவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை. சிலருக்கு கூடுதலான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய மென்பொருளில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. பணத்தை கையாள்வதில் முறைகேடு, சைபர் கிரைம் நடக்க வாய்ப்புள்ளது. மென்பொருள் குறைபாடுகளை விசாரிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

இந்த மென்பொருள் மூலம் கருவூல நடவடிக்கைகள் மற்றும் நிதியை கையாள இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தேசிய தகவல் மையம் உருவாக்கிய தானியங்கி மென்பொருளை பயன்படுத்த தமிழக நிதித்துறை முதன்மை செயலர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தவறாக புரிந்து கொண்டு மனுவில் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துவது அவசியம். இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us