ADDED : மார் 20, 2025 05:45 AM
மதுரை: பாரம்பரிய பயிர் ரகங்கள், உழவர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் 27, 28ல் நடக்கிறது.
பாரம்பரிய ரகங்களை பயிரிடும் விவசாயிகள் தங்கள் ரகங்களை வெளியிடுவதற்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கும் வழிகாட்டப்படும். உள்ளூர் காய்கறி உட்பட பல்வேறு ரகங்களை பயிரிடும் விவசாயிகள் பங்கேற்கலாம் என விதை அறிவியல் துறைத்தலைவர் சுஜாதா தெரிவித்துள்ளார். அலைபேசி: 94437 90200.