/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம் கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்
கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்
கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்
கோயிலில் டன் கணக்கில் மாலைகள் அகற்றம்
ADDED : ஜூன் 12, 2025 02:12 AM

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பேரூராட்சி சார்பில் துாய்மை பணி நடந்தது. வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் தீச்சட்டி, பால்குடம் நடந்தது. நேர்த்திக்கடன் முடிந்து பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த மாலைகளை கோயில் வளாகத்தில் விட்டு செல்வர்.
டன் கணக்கில் சேர்ந்த மாலைகளை அகற்ற பேரூராட்சி சார்பில் தன்னார்வலர்கள், மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சேர்மன் ஜெயராமன் தலைமையில் கவுன்சிலர் சத்யபிரகாஷ், பேரூராட்சி, கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் துாய்மைப் பணியில் பங்கேற்றனர்.