ADDED : ஜூன் 16, 2025 12:19 AM
நாகமலை: நாகமலைப் புதுக்கோட்டை வி.பி.கோல்டன் மஹாலில், சிறுதானியங்களின் பயன்கள் அறியும் வகையில் வேளாண் துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழா, நாளை (ஜூன் 17) காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.
மாவட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பரவலாக்கும் வகையிலும், சிறுதானிய உணவுப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் இத்திருவிழா நடக்கிறது.
அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். வேளாண் துறை, அதைச் சார்ந்த துறை அலுவலர்கள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் ஆகியோர் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கவுள்ளனர். பல்வேறு கருத்துக்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று சிறுதானியங்களின் பயன்களை அறியலாம்.