/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சிகள் / மார்ச் 23 மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் / மார்ச் 23 மதுரை
இன்றைய நிகழ்ச்சிகள் / மார்ச் 23 மதுரை
இன்றைய நிகழ்ச்சிகள் / மார்ச் 23 மதுரை
இன்றைய நிகழ்ச்சிகள் / மார்ச் 23 மதுரை
ADDED : மார் 23, 2025 06:40 AM
கோயில்
மாதாந்திர உழவாரப்பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
பங்குனி திருவிழா: சித்திவிநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, முளைப்பாரி ஆற்றுக்கு செல்லுதல், காலை 7:00 மணி, அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, காலை 9:00 மணி, படையல் பூஜை, காலை 9:30 மணி.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம், தீச்சட்டி எடுத்தல்: வடக்கு புற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, காலை 7:00 மணி.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல்: கருப்பணசாமி காளியம்மன் கோயில், காரியேந்தல்பட்டி காலை 8:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
நாம சங்கீர்த்தனம், சத்குரு ஞானானந்த பஜன் மண்டலி, சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
பள்ளி, கல்லுாரி
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா: சாமநத்தம், தலைமை: கல்லுாரி முதல்வர் கவிதா, காலை 10:30 மணி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு, சிறப்பு விருந்தினர்: டாக்டர் ஆனந்தி பாபு, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதியம் 2:00 மணி.
சவுராஷ்டிரா பள்ளியின் 1970 ஆண்டு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, கவுரவ விருந்தினர்கள்: மூத்த ஆசிரியர்கள் சந்திரசேகரன், வெங்கட்ராமன், சிறப்பு விருந்தினர்: டாக்டர் கண்ணன், சனாதன கோசாலை செயலாளர் விஜய் பாபு, காலை 9:30 மணி.
பொது
திருக்குறள் திருவிழா, குன்றக்குடி மகாசன்னிதானம் நுாற்றாண்டு விழா: மணிமொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா, சிறப்புரை: உலகத் திருக்குறள் பேரவை தலைவர் பொன்னம்பல அடிகளார், உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், திருக்குறளில் சாதனை படைப்பு: மாணவன் மகிழினியன், ஏற்பாடு: என்.எம்.கே., அறக்கட்டளை, உலகத் திருக்குறள் பேரவை, காலை 9:00 மணி.
மதுரை குமரி மக்கள் பிசினஸ் சேம்பர்ஸ் கருத்துரை, பொதுக்குழு கூட்டம்: தருமை ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் முத்தம் பெருமாள், சிறப்புரை: பொதுச் செயலாளர் சந்திரசேகரன், சிறப்பு விருந்தினர்கள்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நாராயணகுமார், கோவை வேளாண் பல்கலை ஓய்வு பெற்ற பதிவாளர் ஆனந்தகுமார், ஏற்பாடு: மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை, மாலை 5:00 மணி.
கவிதா மண்டல நுால் வெளியீட்டு விழா: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இவலச பயற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸா சேவா சமாஜம், 25, மஹால் 6வது தெரு, மதுரை, தமிழ்நாடு மஹா சவுராஷ்ட்ர ஸபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, என்.கே., குப்பய்யன், ரத்னமணி பள்ளி, கைத்தறிநகர், நிலையூர், மதுரை, தலைமை: ஆர்.கே.பாஸ்கர், ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
மகளிர் திருவிழா: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, சிறப்பு விருந்தினர்கள்: மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, திருச்சி டி.எஸ்.பி., லில்லி கிரேஸ், மாவட்ட சமூக நல அலுவலர் திலகம், ஏற்பாடு: தமிழ்நாடு கல்சுரல் அகாடமி டிரஸ்ட், காலை 9:00 மணி.
மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆண்டு விழா: சி.ஆர்.மகால், விரகனுார், மதுரை, தலைமை: தலைவர் மாதவன், சிறப்பு விருந்தினர்கள்: தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், வழக்கறிஞர் தியாகராஜன், ஆடிட்டர் முஹம்மது கான், காலை 9:30 மணி.
இப்தார் நோன்பு திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்: வெள்ளாளஞ் செட்டியார் மகால், ஒத்தக்கடை, பங்கேற்பு: த.வெ.க., வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கல்லானை, மாலை 6:00 மணி.
உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய மாநாடு - நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: தலைவர் மணவாளன், சிறப்பு விருந்தினர்கள்: நடிகை தேவயானி, நடிகர்கள் சித்ரா லட்சுமணன், தருண் கோபி, ஏற்பாடு: தென்னிந்திய நுகர்வோர், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, காலை 10:00 மணி.
கல்லங்காட்டில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: கல்லங்காடு அழகுநாச்சியம்மன் கோயில், கொடுக்கம்பட்டி, மேலுார், ஏற்பாடு: 18 கிராம மக்கள் கூட்டமைப்பு, காலை 10:00 மணி.
தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் இணையும் விழா: கே.பி.எஸ். மஹால், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.
தேர்தல் வாக்குறுயை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, தலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பொற்செல்வன், பாண்டி, ஜோயல்ராஜ், நவநீதகிருஷ்ணன், தமிழ், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி: ஆரோலேப், வீரபஞ்சான், மதுரை, சிறப்பு விருந்தினர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 9:30 மணி.
மருத்துவம்
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.
ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இலவச எலும்பு சத்து கண்டறியும் முகாம்: சுகப்பிரியா மருத்துவமனை, லேக் வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
மேலுார் அரசு மருத்துவமனை, மதுரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம்: ஊராட்சி திருமண அரங்கம், ஒத்தக்கடை, ஏற்பாடு: ஏ.ஐ.ஒய்.எப்., மதுரை புறநகர் மாவட்டம், காலை 10:00 மணி.
கண்காட்சி
தாய்லாந்து செயற்கை மலர்கள், முத்து நகைகள், ஈரான் வெள்ளி நகைகள், ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள், துபாய் வாசனை திரவியங்கள் அடங்கிய சர்வதேச ஷாப்பிங் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
சோபா, கிச்சன், படுக்கையறை பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள், ஓவியங்கள், மெத்தைகள் அடங்கிய பர்னிச்சர் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட் லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
சிறப்பு புத்தக கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: காந்திய இலக்கிய சங்கம், காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.