Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : செப் 12, 2025 04:55 AM


Google News
கோயில் ஆவணி கடைசி வெள்ளி சிறப்பு பூஜை: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, சுவாமிக்கு ஆவேச அலங்காரம், இரவு 7:00 மணி.

ராகுகால பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, காலை 10:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

108 விளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, போட்டியை துவங்கி வைப்பவர்: முதல்வர் சாந்திதேவி, சான்றிதழ் வழங்குபவர்: வழக்கறிஞர் மாரியப்பமுரளி, காலை 10:00 மணி.

தேசிய அறிவியல் கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: ஐ.சி.எம்.ஆர்-விக்டர் கட்டுப்பாட்டு ஆய்வு மைய மூலக்கூறு கண்டறிதல் துறை தலைவர் பரமசிவன் ராஜய்யா, ஐ.ஐ.டி., கான்பூர் உதவிப் பேராசிரியர்கள் பாஸ்கர் சுந்தரராஜூ, அப்பாராவ், ஸ்ரீனிவாஸ், பார்த்தசாரதி சுப்ரமணியன், முன்னிலை: முதல்வர் பால் ஜெயகர், காலை 10:00 மணி.

மின்னணுவியல், தொலைத்தொடர்பியல் துறை கருத்தரங்கம்: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, பொட்டப்பாளையம், தலைமை: தலைவர் கே.என்.கே.கார்த்திக், சிறப்புரை: நோக்கியா பொருள் கட்டமைப்பு நிபுணர் ராஜ்குமார், பங்கேற்பு: செயலாளர் கே.என்.கே.கணேஷ், முதல்வர் ராம்பிரசாத், காலை 10:00 மணி.

பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, சிறப்புரை: எம்.பி., வெங்கடேசன், பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவம், பங்கேற்பு: மருத்துவ பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், அரசு மருத்துவக் கல்லுாரி டீன் அருள் சுந்தரேஷ் குமார், மாலை 6:00 முதல் 9:00 மணி வரை, பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு குறித்த விளக்க கூட்டம்: வர்த்தக சங்க பவளவிழா ஹட்சன் பேரவை அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: ஆடிட்டர்கள் சரவணக்குமார், பாலசுப்ரமணியன், ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மாலை 5:00 மணி.

வினோபாவே பிறந்தநாள், பாரதியார் நினைவு சமய பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: செப்சிரா, மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

விளையாட்டு

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மண்டல அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகள்: ரேஸ் கோர்ஸ் மைதானம், மதுரை, கல்லுாரி மாணவர்களுக்கான பீச் வாலிபால் போட்டிகள், மாவட்ட அளவிலான பொதுப்பிரிவு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், பொதுப்பிரிவினருக்கான சிலம்ப போட்டிகள், காலை 7:00 மணி.

கண்காட்சி விவேகானந்தா சேலைகள் பண்டிகை விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us