இன்றைய நிகழ்ச்சி / பிப்.,24க்குரியது
இன்றைய நிகழ்ச்சி / பிப்.,24க்குரியது
இன்றைய நிகழ்ச்சி / பிப்.,24க்குரியது
ADDED : பிப் 24, 2024 04:11 AM
கோயில்
மாசித்திருவிழா - 10ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தீர்த்தவாரி உற்ஸவம் - காசி விஸ்வநாதர் கோயில் மண்டகபடி, வைகை வடகரை, காலை 10:00 மணி, தங்கம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா, மாலை 6:00 மணி.
மாசிப்பெருந்திருவிழா - பத்தாம் நாள்: இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை, கொடி இறக்குதல், காலை 11:00 மணி.
கள்ளழகர் கோயில் தெப்பத்திருவிழா: பொய்கைகரைபட்டி, காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணிக்குள்.
மாசி மகம் தெப்பத்திருவிழா - 11ம் நாள் விழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அலங்கார திருமஞ்சனம், காலை 9:00 மணி, தங்கச்சிவிகையில் பெருமாள் புறப்பாடு, மாலை 6:00 மணி, உபய நாச்சியாருடன் தெப்பத்துக்குள் சுற்றுதல், இரவு 7:45 மணி.
கஜேந்திர மோட்ச திருவிழா: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், கள்ளர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளுதல், காலை 8:00 மணி, மோகனி அலங்காரத்துடன் தைலக்காப்பாகி பக்தி உலா, இரவு 8:00 மணி.
மதுரை வடக்குமாசிவீதி ராமாயணச் சாவடி தெரு, ஆயிரம் வீட்டு யாதவர் உறவின்முறையின் ராமசுவாமி நவநீத கிருஷ்ணசாமி தேவஸ்தான தெப்ப உற்ஸவம்: திருமலை நாயக்கர் ஊருணி, திருப்பாலை, இரவு 7:00 மணி.
மாசிமகம் பெருந்திருவிழா - திருக்கல்யாணம்: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணிக்குள்.
கும்பாபிேஷகம் - யாகசாலை பூஜை துவக்கம்: சர்வசித்தி விநாயகர் கோயில், தீயணைப்பு நிலையம், அனுப்பானடி, மதுரை, அதிகாலை 5:30 மணி முதல்.
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்: சிருங்கேரி சங்கரமடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
பவுர்ணமியை முன்னிட்டு சாரதா அம்மாள் ஊஞ்சல் உற்ஸவம்: சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:15 மணி.
பக்தி சொற்பொழிவு
மகாபாரதம்: நிகழ்த்துபவர் - முரளிஜி பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, இ.பி. காலனி, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
திறன் மேம்பாடு தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு நிறைவு விழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் சுஜாதா, உதவி பேராசிரியை சுகந்தி ஹெப்சிபா, ஏற்பாடு: ஆங்கிலத்துறை, மதியம் 3:30 மணி.
57வது பட்டமளிப்பு விழா: லேடிடோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: புதுடில்லி ஜாமியா ஹம்தார்ட் பல்கலை பதிவாளர் சிக்கந்தர், காலை 10:00 மணி.
மழலையர் இளநிலை வகுப்பு மாணவர்களின் வானவில் வண்ணங்கள் நிகழ்ச்சி, பள்ளி ஆண்டு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி வளாகம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அரசு போக்குவரத்து கழக முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெயராஜன், நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ஏற்பாடு: விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியகம், மாலை 5:00 மணி.
பொது
பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணம்: வில்லாபுரம் முதல் பழங்காநத்தம் வரை, ஏற்பாடு: மதுரை நகர் பா.ஜ., காலை 8:30 மணி.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது மற்றும் லோக்சபா தேர்தல் தொடர்பாக தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்: குறிஞ்சி திருமணம் மகால், திருப்பாலை, தலைமை: அவைத் தலைவர் சுப்பிரமணியன், பேசுபவர்: மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., மாலை 5:00 மணி.
சட்ட அலுவலர்களுக்கான கூடுதல் கட்டடம் திறப்பு விழா: உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தலைமை: தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா, திறப்பாளர்: உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், பங்கேற்பு: பில்டிங் கமிட்டி தலைவர் நீதிபதி கிருஷ்ணகுமார், மாலை 5:30 மணி.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கக்கோரி மாநில சிறப்பு மாநாடு: உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், பங்கேற்பு: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், காலை 10:00 மணி.
சட்டத்திருவிழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், விக்டோரியா கவுரி, ஏ.பி.வி.பி., தேசிய செயலாளர் ராஜ், ஏற்பாடு: தமிழக சட்டக்கல்லுாரி மாணவர் மன்றம், காலை 10:00 மணி முதல்.
ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் காளிதாஸ் எழுதிய மெமரி பிளஸ் மெமரி எய்டு அண்ட் காஸ்மிக் கவுன்சிலிங் நுால் வெளியீடு: மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரிய செயலாளர் பார்த்தசாரதி, சிறப்புரை: தமிழ்ப்பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை, மாலை 5:15 மணி.
வைகை நதிக்கு பவுர்ணமி தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, மதுரை, தலைமை: தலைவர் ராஜன், ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 5:30 மணி.
அச்சக தினவிழா: மதுரை உற்பத்திக் குழு அலுவலகம், மகபூப்பாளையம், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஜோ ஆப்செட் சுவக்கின் மரியநாதன், ஏற்பாடு: தி மதுரை பிரின்டர்ஸ் அசோசியேஷன், மாலை 6:00 மணி.
முப்புலிசுவாமி கோயில் உற்ஸவ விழாவையொட்டி ஜல்லிக்கட்டு: சக்குடி, காலை 8:00 மணி.
மாநில ஹாக்கி அரை இறுதி போட்டிகள்: அண்ணா பூங்கா, திருநகர், ஏற்பாடு: திருநகர் ஹாக்கி கிளப், மதியம் 3:00 மணி.
பொதுக்குழுக்கூட்டம்: ஜான்ஸ் ஓட்டல், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: மாநில தேசிய நல குழும சிறப்பு அலுவலர் டாக்டர் மருதுதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மருத்துவத்துறை பொதுப்பணி அலுவலர் சங்கம், காலை 10:00 மணி.
நவீன 12 வகுப்பறை கட்டடம் திறப்பு விழா: ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முன்னிலை சி.இ.ஓ., கார்த்திகா, தலைமை: கலெக்டர் சங்கீதா, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி., காலை 10:30 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
சமூகநலத்துறையின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு: மறவபட்டி, பேசுபவர்: சமூகநலத்துறை பாதுகாப்பு அதிகாரி வாசுகி, ஏற்பாடு: மதுரை சமூகஅறிவியல் கல்லுாரி, மாலை 5:00 மணி.
மகளிர் ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்: ஆலாத்துார், மாரனிவாரியேந்தல், சிச்சிலுப்பை, பங்கேற்பு: சத்துணவு நிபுணர் பாலமுருகன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, காலை 10:30 மணி.
மருத்துவ முகாம்
இலவச சிறப்பு மருத்துவ முகாம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: தொழில் வர்த்தக சங்கம், வேலம்மாள் மருத்துவமனை, காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.
சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்: ஸ்ரீரமணா கிட்னி கேர் மருத்துவமனை, அம்பிகா தியேட்டர் பின்புறம், அண்ணாநகர், மதுரை, காலை 8:00 மணி முதல்.
கண்காட்சி
கட்டுமான பொருட்கள், இன்டீரியர், எக்ஸ்டீரியர், ேஹாம் டெக்கர்ஸ், பர்னிச்சர்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.