/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றம் காக்க.. கோயிலை காக்க... மதுரையில் இன்று பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு குன்றம் காக்க.. கோயிலை காக்க... மதுரையில் இன்று பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு
குன்றம் காக்க.. கோயிலை காக்க... மதுரையில் இன்று பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு
குன்றம் காக்க.. கோயிலை காக்க... மதுரையில் இன்று பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு
குன்றம் காக்க.. கோயிலை காக்க... மதுரையில் இன்று பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு

ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் கந்தசஷ்டி கவசம்
ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாடு முக்கிய நிகழ்வாக மாநாடு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர். நேரில் கலந்து கொள்ளாதவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து பாடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் தவிர்க்க ஏற்பாடு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் முன்னதாக 'பாஸ்' பெற வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர். இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹிந்து அமைப்பு தன்னார்வலர்கள்
வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் அந்த பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவர். மாற்றுத்திறனாளிகள் செல்ல சக்கர நாற்காலிகளும், தாய்மார்கள் பாலுாட்டுவதற்கான தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், 200 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
2279 போலீசார் பாதுகாப்பு
மாநாட்டையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 5 துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 2279 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு விமானத்தில் பவன் கல்யாண்
ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் இன்று காலை 11:00 மணிக்கு மதுரை வருகிறார். காலையில் மீனாட்சி கோயில், மாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்து விட்டு மாலை 6:00 மணியளவில் மாநாட்டிற்கு வருகிறார். இரவு 8:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆந்திரா செல்கிறார். இதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்
முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16 ல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளுக்குநாள் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் நேற்று முன்தினம் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுபோல், நேற்று ஒரு மணி நேரம் முன்னதாக அருட்காட்சி தொடங்கியது. இன்றும் (ஜூன் 22) காலை 8:00 மணி முதல் பக்தர்கள் அருட்காட்சி காண அனுமதிக்கப்படுவர். நேற்று மாலை வரை அருட்காட்சியை ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.