Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருநெல்வேலி மேட்டுப்பாளையம்  சிறப்பு ரயில் நீட்டிப்பு

திருநெல்வேலி மேட்டுப்பாளையம்  சிறப்பு ரயில் நீட்டிப்பு

திருநெல்வேலி மேட்டுப்பாளையம்  சிறப்பு ரயில் நீட்டிப்பு

திருநெல்வேலி மேட்டுப்பாளையம்  சிறப்பு ரயில் நீட்டிப்பு

ADDED : ஜூலை 02, 2025 07:55 AM


Google News
மதுரை : மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி --- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை செப். 1 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி ஞாயிறு தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஆக.31 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06029) செப்.1 வரை இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, போத்தனுார், கோவை வழியாக மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறது. மறுமார்க்கம் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு செவ்வாய் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us