/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒத்தக்கடை வாலிபர் கொலையில் மூன்று பேர் கைது ஒத்தக்கடை வாலிபர் கொலையில் மூன்று பேர் கைது
ஒத்தக்கடை வாலிபர் கொலையில் மூன்று பேர் கைது
ஒத்தக்கடை வாலிபர் கொலையில் மூன்று பேர் கைது
ஒத்தக்கடை வாலிபர் கொலையில் மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 14, 2025 05:25 AM
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வாலிபர் ஒருவர் கொலையான வழக்கில், ஆட்டோவில் 'லிப்ட்' கேட்டு வந்தவருடன் மதுஅருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஒத்தக்கடையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன் காந்திநகர் பகுதி மயானத்தில் பிணமாகக் கிடந்தார்.
அவர் யாரென தெரியவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் ஒத்தக்கடை போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.
கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் விசாரித்ததில், இறந்தவர் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறிச்சென்றது தெரிந்தது.
விசாரணையில் அவரை அழைத்துச் சென்றது ஒத்தக்கடை சித்திரைச்செல்வம் 28, விக்னேஷ் 22, செட்டியார் என்ற சிவகுமார் எனத் தெரிந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில், கொலையான நபர் லிப்ட் கேட்டு இவர்களின் ஆட்டோவில் ஏறியுள்ளார். அவர்கள் அவரிடம் திடீர் நட்புடன் பழகினர். அதன்பின் நால்வரும் மது அருந்த முடிவு செய்து, மயானம் அருகே அமர்ந்து அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சித்திரைச்செல்வம் தரப்பினர் அந்த நபரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பினர் எனத் தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இறந்த நபர் யார் என விசாரணை தொடர்கிறது.