ADDED : ஜூன் 09, 2025 02:32 AM
மதுரை: மதுரை ஆதினத்தில் அதன் குரு முதல்வர் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா 5 நாட்கள் நடக்கிறது.
முதல்நாள் விழாவில் விக்கிரமசிங்கபுரம் பேராசிரியை விஜயலட்சுமிக்கு 'மங்கையர்க்கரசி விருது', ரூ.5000 பொற்கிழி, திருநெல்வேலி வழக்கறிஞர் குற்றாலநாதருக்கு 'வ.உ.சி., விருது' ரூ.5000 பொற்கிழியை மதுரை ஆதினம் வழங்கினார். ஆதினப் புலவர் கருணாசேகர், நிர்வாகிகள் எழில் பரமகுரு, பால மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.