Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருச்செந்துார் கும்பாபிஷேக சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்துார் கும்பாபிஷேக சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்துார் கும்பாபிஷேக சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்துார் கும்பாபிஷேக சிறப்பு ரயில் இயக்கம்

ADDED : ஜூலை 01, 2025 03:50 AM


Google News
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை 7ல் திருநெல்வேலியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் ரயில் (06101) காலை 10:50 மணிக்கு திருச்செந்துார் செல்லும். மறுமார்க்கம் அன்று காலை 11:20 மணிக்கு புறப்படும் ரயில் (06102) மதியம் 12:55 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயில்கள் செய்துங்கநல்லுார், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி வழியாக இயக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us