/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடுமில்லை, நீருமில்லை, வசிப்பதற்கு வழியுமில்லை ரத்தக்கண்ணீர் வடிக்குது ராம்கோ நகர் ரோடுமில்லை, நீருமில்லை, வசிப்பதற்கு வழியுமில்லை ரத்தக்கண்ணீர் வடிக்குது ராம்கோ நகர்
ரோடுமில்லை, நீருமில்லை, வசிப்பதற்கு வழியுமில்லை ரத்தக்கண்ணீர் வடிக்குது ராம்கோ நகர்
ரோடுமில்லை, நீருமில்லை, வசிப்பதற்கு வழியுமில்லை ரத்தக்கண்ணீர் வடிக்குது ராம்கோ நகர்
ரோடுமில்லை, நீருமில்லை, வசிப்பதற்கு வழியுமில்லை ரத்தக்கண்ணீர் வடிக்குது ராம்கோ நகர்
ADDED : செப் 26, 2025 03:47 AM

மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டை ராம்கோ நகரின் 4 பகுதிகளிலும் குடிநீர், ரோடு உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
அடிப்படை வசதி எதுவும் இல்லாத இப்பகுதியின் மேம்படுத்த செயல்படும் குடியிருப்போர் சங்கத் தலைவி மீனாட்சி, செயலாளர் வெங்கடேஷ், துணைத் தலைவர் சீத்தாராமன், துணைச் செயலாளர் தேவேந்திரன், கவுரவ ஆலோசகர் கரந்தமலை, செயற்குழு உறுப்பினர்கள் காமேஷ், திருவேங்கடசாமி, கோபிநாத் கூறியதாவது:
இப்பகுதியில் 2024ல் அமைத்த தார் ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் திணறுகின்றன. நான்குவழி சாலையில் சர்வீஸ் ரோடு இல்லாததால் விபத்துக்கள் நடக்கின்றன. இங்கு பேஸ் 2 , 3, 4 பகுதிகளில் மழை நேரம் தண்ணீர் இடுப்பளவு சூழ்ந்து நிற்கிறது.
குடிநீர் இல்லை ஜல்ஜீவன் திட்ட குழாய்கள் அமைத்து 6 மாதங்களைக் கடந்தும் செயல்படாமல் உள்ளன. லாரி தண்ணீரை ரூ.12 கொடுத்து விலைக்கு வாங்குகிறோம். இங்கு தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். குப்பை வண்டி வாரம் 3 நாட்கள் கூட வருவதில்லை. இதனால் தெருக்களில் தேங்கும் குப்பை கூளங்களுடன் எப்படி வசிப்பதென்றே தெரியவில்லை.
இங்கு 30க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிந்து தனியாக செல்வோரை அச்சுறுத்துகின்றன. ஒன்றிய சுகாதார அதிகாரிகள் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், செப்டிக் டேங்குகளை 2 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய ரூ.3 ஆயிரம் செலவாகிறது.
பத்திர அலுவலகம் ரோட்டில் மின்விளக்குகள் செயல்படாமலும், போதுமான வெளிச்சம் இல்லாமலும் உள்ளன. அடிக்கடி மின்அழுத்த மாறுபாடால் வீட்டு உபயோக சாதனங்கள் பழுதாகின்றன. லேசான காற்று, மழைக்கும் மின்தடை ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மர் அமைத்தும் செயல்பாட்டில் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்களால் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளோம்.
நுாலகம், ரேஷன் கடை இல்லாததால் அவற்றின் தேவைக்காக 3 கி.மீ., நடக்கிறோம். ஓய்வு பெற்றோர் அதிகமுள்ள பகுதியில் பொழுது போக்கு பூங்காகூட இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.