/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை சிறைக்கு கஞ்சாவுடன் வந்த கைதி; கொடுத்தவரும் நலம் விசாரிக்க வந்து கைதியானார் மதுரை சிறைக்கு கஞ்சாவுடன் வந்த கைதி; கொடுத்தவரும் நலம் விசாரிக்க வந்து கைதியானார்
மதுரை சிறைக்கு கஞ்சாவுடன் வந்த கைதி; கொடுத்தவரும் நலம் விசாரிக்க வந்து கைதியானார்
மதுரை சிறைக்கு கஞ்சாவுடன் வந்த கைதி; கொடுத்தவரும் நலம் விசாரிக்க வந்து கைதியானார்
மதுரை சிறைக்கு கஞ்சாவுடன் வந்த கைதி; கொடுத்தவரும் நலம் விசாரிக்க வந்து கைதியானார்
ADDED : மார் 20, 2025 07:41 AM
மதுரை : நீதிமன்ற விசாரணைக்கு சென்றுவிட்டு மதுரை மத்திய சிறைக்கு திரும்பிய கைதியிடம் 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு கொடுத்து உதவிய உறவினர் கார்த்திக் என்பவர் மறுநாள் நலம் விசாரிக்க சிறைக்கு வந்தபோது காவலர்கள் பிடித்து கைதியாக்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டிச்செல்வம், ராஜா, வினோத்குமார். வழக்கு ஒன்றில் மதுரை சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர். மார்ச் 17ல் வழக்கு விசாரணைக்காக இவர்களை ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு அம்மாவட்ட போலீசார் 4 பேர்அழைத்துச்சென்றனர். மாலையில்மீண்டும் சிறைக்கு வந்த கைதிகளை சோதனையிட்ட போது ஆண்டிச்செல்வம் ஆசனவாயில் இருந்து 20 கிராம் கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவரது உறவினரான அபிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கொடுத்தது தெரிந்தது.நேற்று முன் தினம் மதுரை சிறைக்கு ஆண்டிச்செல்வத்தை சந்திக்க வந்த கார்த்திக்கை காவலர்கள் சிறை பிடித்தனர். விசாரணைக்கு பின் கரிமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகரிலும் கஞ்சா
விருதுநகர் மாவட்ட சிறையில் கைதி பாலகிருஷ்ணனை அவரது தம்பி தமிழரசன் உள்ளிட்டோர் நேற்று சந்திக்க வந்தனர். அவர்களை காவலர்கள் சோதனையிட்ட போது தமிழரசன் உள்ளாடையில் 20 கிராம் கஞ்சா பதுக்கி இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதிகளின் 'நண்பன்' போலீஸ்
சிறை காவலர்கள் கூறியதாவது: கைதிகளை வழிக்காவலுக்கு அழைத்துச்செல்லும்போலீசாரில் சிலர் 'கண்டும், காணாமலும்' இருக்கின்றனர். வழிக்காவலுக்கு அழைத்துச்செல்லும்போது என்னென்னவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதை எதையுமே அவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால்தான்சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள்ஊடுருவுகின்றன. வழிக்காவலின் போது கைதிகள் 'எஸ்கேப்' ஆகின்றனர்.
கைதிகளிடம் கஞ்சா பறிமுதல் செய்யும்போது அவர்களை வழிக்காவலுக்கு அழைத்துச்சென்ற போலீசார் குறித்து சம்பந்தப்பட்ட எஸ்.பி.,க்கு சிறை நிர்வாகம் அறிக்கை அனுப்பும்.ஆனால் அதன் மீது 'துறை ரீதியான விசாரணை' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு விடுவர்.
இது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கூறினர்.