Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மூக்கில் தொடங்கும் பயணம் காது, தொண்டையில் முடியும்

மூக்கில் தொடங்கும் பயணம் காது, தொண்டையில் முடியும்

மூக்கில் தொடங்கும் பயணம் காது, தொண்டையில் முடியும்

மூக்கில் தொடங்கும் பயணம் காது, தொண்டையில் முடியும்

ADDED : ஜூன் 30, 2025 03:01 AM


Google News
மனித உடல் அமைப்பில், ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புடன்இணைந்து இயங்கும் தன்மை கொண்டது. காது, மூக்கு, தொண்டை ஆகியவை தனித்தனியாக இயங்குவது போன்று தெரிந்தாலும், ஒன்றுடன் ஒன்று இணைந்தே இயங்கின்றன. மூக்குதான் அவற்றின் மைய இணைப்பு பாலமாக உள்ளது.மூக்கு என்பது சுவாசிக்கவும், வாசனை உணர்வதற்காகவும் மட்டும் இல்லை.

யூஸ்தேசியன் குழாய்என்பது மூக்குப் பின்னால் தொடங்கி, காது மற்றும் தொண்டையை இணைக்கும் ஒரு நுணுக்கமான குழாய். இது காது அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், சத்தம் தெளிவாகக் கேட்கவும் உதவகிறது. மூக்கில் ஏற்படும் பாதிப்பு, காது, தொண்டையை பாதிக்கும்.சளி அல்லது அலர்ஜியால் மூக்கடைப்பு ஏற்பட்டால், யூஸ்தேசியன் குழாய்அடைபட்டுவிடும்.

இதனால் காது அழுத்தம், சத்தம் மங்குதல், காது அழற்சிஏற்படலாம்.அதேபோல், தொண்டையில் ஏற்படும் தொற்று மூக்குப்பாதையை மூடி, காது வலியையும் ஏற்படுத்தும். மூக்கு சீராக செயல்படாவிட்டால்காது வலி,செவியில் சத்தம் இழப்பு,தொண்டை வலி, சைனஸ் அழற்சி, தொடர்ந்து ஏற்படும் சளி, இருமல், குரல் மாறுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

இ.என்.டி., என்பதன் சுருக்கமே இயர் (காது), நோஸ் (மூக்கு), த்ரோட் (தொண்டை) என்பது. இவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதால் ஒரே வல்லுநரால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில்எந்தவொரு அறிகுறியும் தனியாக இல்லாமல், ஒரே மூல காரணமாக மூன்று பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.உதாரணத்திற்குமூக்கில் ஏற்படும் அலர்ஜியால் யூஸ்தேசியன் குழாய் மூடப்பட்டு, காது, தொண்டையில் அலர்ஜிஏற்படலாம்.

மூக்கு சுவாச பாதையை சுத்தமாக வைப்பதன் மூலம் அலர்ஜி பிரச்னைகளை தவிர்க்கலாம்.தொடர் சளி, மூக்கடைப்பு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

துரித சிகிச்சை மூலம் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நவீன சிகிச்சை முறைகளில், 'செப்டோபிளாஸ்டி', 'டைம்பனோபிளாஸ்டி' மூலம்நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கின்றன.

சிறிய மூக்கடைப்பையும் வெறும் அலர்ஜி என நினைத்து விலக்கி விடக்கூடாது. அந்த ஒரு பாதிப்பு காது மற்றும் தொண்டை முழுவதும்தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற அறிகுறிகள் நீடித்தால், இ.என்.டி.,நிபுணரை அணுகுவது அவசியம்.

-- டாக்டர் சந்திரசேகர்

மதுரை

96004 60658





      Our Apps Available On




      Dinamalar

      Follow us