Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் துவங்கியது புத்தகத் திருவிழா செப்.15 வரை நடக்கிறது

மதுரையில் துவங்கியது புத்தகத் திருவிழா செப்.15 வரை நடக்கிறது

மதுரையில் துவங்கியது புத்தகத் திருவிழா செப்.15 வரை நடக்கிறது

மதுரையில் துவங்கியது புத்தகத் திருவிழா செப்.15 வரை நடக்கிறது

ADDED : செப் 06, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித் துறை சார்பில், புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது. அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

விழாவில் டி.ஆர்.ஓ., அன்பழகன் வரவேற்றார். கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்துப் பேசுகையில், 'பொது நுாலக இயக்கக ஸ்டாலில் 'புத்தக தானம்' பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பெறப்படும் புத்தகங்கள், அரசுப் பள்ளி நுாலகம், கிராமப்புற நுாலகங்களுக்கு வழங்கப்படும்' என்றார்.

அமைச்சர் மூர்த்தி பேசுகையில், 'கல்விச் செல்வத் திற்கு இணையான செல்வம் இல்லை. மாலையில் பள்ளி மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு மூலம் உணவுகள், இயற்கை உற்பத்தி பொருட்கள் விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் தமிழகத்திற்கே முன்னுதாரணமாக மதுரை அமையும்' என்றார்.

வருவாய் அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார். மேயர் இந்திராணி, பபாசி தலைவர் சேது சொக்க லிங்கம், செயலாளர் முருகன், பொருளாளர் சுரேஷ், கவுன்சிலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். இத்திருவிழாவில் 231 ஸ்டால்கள் அமைக்கப் பட்டுள்ளன. புத்தகங்களை 10 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

பள்ளி மாணவர்கள் அடையாள அட்டை காண்பித்து 5 சதவீத கூடுதல் தள்ளுபடி பெறலாம். செப்., 15 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

வார நாட்களில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை அரசு இசைக் கல்லுாரி, கலைப் பண்பாட்டுத் துறை யினரின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் சொற்பொழிவு, பட்டிமன்றம் நடைபெறுகிறது.

தினமலர் சந்தா ரூ.1999 செலுத்தினால்

ரூ.1000 மதிப்பில் புத்தகங்கள் இலவசம்

புத்தக கண்காட்சியில், தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் (எண் 24, 25) 'சந்தா ஒன்று, பலன் மூன்று' சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால், ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சம் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கான காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us