/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மத்திய சிறையை இடமாற்ற டெண்டர் வெளியீடு ரூ.336 கோடியில் 3 கட்டமாக பணி நடக்கிறது மதுரை மத்திய சிறையை இடமாற்ற டெண்டர் வெளியீடு ரூ.336 கோடியில் 3 கட்டமாக பணி நடக்கிறது
மதுரை மத்திய சிறையை இடமாற்ற டெண்டர் வெளியீடு ரூ.336 கோடியில் 3 கட்டமாக பணி நடக்கிறது
மதுரை மத்திய சிறையை இடமாற்ற டெண்டர் வெளியீடு ரூ.336 கோடியில் 3 கட்டமாக பணி நடக்கிறது
மதுரை மத்திய சிறையை இடமாற்ற டெண்டர் வெளியீடு ரூ.336 கோடியில் 3 கட்டமாக பணி நடக்கிறது
ADDED : மே 30, 2025 06:09 AM
மதுரை: மதுரை மத்திய சிறையை மேலுார் அருகே செம்பூருக்கு இடமாற்ற டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.336 கோடியில் கட்டுமான பணி ஓரிரு மாதங்களில் துவங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையை முதல்வர் ஸ்டாலின் காணொளியில் துவக்கி வைக்க உள்ளார்.
பழமையான மதுரை மத்திய சிறை இடநெருக்கடியான 31 ஏக்கரில் அரசரடி பகுதியில் அமைந்துள்ளது. 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் இருப்பதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க புழல் போல் புறநகர் பகுதியில் மதுரை சிறையை இடமாற்ற வேண்டும் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியது. இதன் எதிரொலியாக இடையப்பட்டி, தெத்துார் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பல்லுயிர் தளம், வனஉயிரினங்கள் நடமாடும் இடம் என நிராகரிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மேலுார் தெற்கு தெரு அருகே செம்பூரில் அரசின் புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.336 கோடியில் கட்டுமான பணியை காவலர் வீட்டுவசதி கழகம் மேற்கொள்ள உள்ளது. முதற்கட்டமாக ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புழல் சிறையை 'மாடலாக' வைத்த கட்டுமான பணிகள் ஓரிரு மாதங்களில் துவங்க உள்ளன. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். புதிய சிறை பயன்பாட்டிற்கு வந்த பிறகு, மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கைதிகளை ஆஜர்படுத்த 20 நிமிடங்களில் வந்துவிட முடியும். சிறையில் இருந்து அரை கிலோ மீட்டரில் மேலுார் - திருச்சி நான்குவழிச்சாலை உள்ளது. இதன்மூலம் வெளிமாவட்டங்களுக்கு போலீசார் எளிதாக கைதிகளை அழைத்துச்செல்ல முடியும்.