Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'நியாயமா சொல்லுங்க': எடை குறைத்து தந்தால் சரியாக வினியோகிக்க முடியுமா: ரேஷன் கடைகளை மூடி போராடிய விற்பனையாளர்கள்

'நியாயமா சொல்லுங்க': எடை குறைத்து தந்தால் சரியாக வினியோகிக்க முடியுமா: ரேஷன் கடைகளை மூடி போராடிய விற்பனையாளர்கள்

'நியாயமா சொல்லுங்க': எடை குறைத்து தந்தால் சரியாக வினியோகிக்க முடியுமா: ரேஷன் கடைகளை மூடி போராடிய விற்பனையாளர்கள்

'நியாயமா சொல்லுங்க': எடை குறைத்து தந்தால் சரியாக வினியோகிக்க முடியுமா: ரேஷன் கடைகளை மூடி போராடிய விற்பனையாளர்கள்

ADDED : ஜூன் 28, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
இதையடுத்து 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 174 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 450 ரேஷன் கடைகள் நேற்று மூடப்பட்டன. டாக்பியா மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் பாரூக் அலி, கவுரவ செயலாளர் ஆசிரியத்தேவன் கூறியதாவது:

பேக்கிங் முறையில் தரலாம்


'ப்ளூடூத்' முறையால் ஒரு கார்டுக்கு பொருள் வழங்க 10 நிமிடமாவதால் தினமும் 50 கார்டுகளுக்கே பொருள் வழங்க முடிகிறது. இது சரியான திட்டம் என்றாலும் செயல்படுத்தும் முன் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்.

நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து எடை குறைவாக அனுப்பி விட்டு, நுகர்வோருக்கு சரியான அளவில் வழங்க வற்புறுத்துகின்றனர்.

விவசாயிகள், கூலித்தொழிலாளர் கைரேகை தேய்ந்துள்ளதால் பதிய முடியவில்லை. கண் அறுவை சிகிச்சை செய்திருந்தால் கருவிழி பதியவும் முடியவில்லை. பெரும்பாலான கடைகளில் கழிப்பறை இன்றி பெண் விற்பனையாளர்கள் அவதிப்படுகின்றனர். 'ப்ளூடூத்' முறையை நீக்கி விட்டு, ஒரு கிலோ சீனி, ஒரு கிலோ பருப்பு, 10 கிலோ அரிசி என 'பேக்கிங்' முறையில் தந்தால் இப்பிரச்னை வராது. விடுமுறை நாட்களில் பொருட்கள் நகர்வு பணி கூடாது. இதனை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். தீர்வு கிடைக்காவிடில் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம் என்றனர்.

கோபத்தில் கொதிப்பு


விற்பனையாளர் ஜாஸ்மின் கூறியதாவது: 'ப்ளூடூத்' மூலம் சரியான எடையில் வைத்தால் மட்டுமே ரசீது போடமுடியும். 10 கிராம் குறைந்தாலும் ரசீது வராது.

50 கிலோ சீனி மூடையில் 47 கிலோதான் இருக்கிறது. எங்களுக்கு சரியான எடையில் கிடைத்தால் தானே சரியான எடையில் வினியோகிக்க முடியும். வயதானோருக்கு கைரேகை சரியாக பதிவதில்லை. அவர்கள் வீட்டில் உள்ளனர். எடை இயந்திரத்தோடு வீட்டுக்கு கொண்டு சென்றால் பொருள் வழங்கலாம். இதெல்லாம் சாத்தியமா. எங்களுக்கு எடையாளர்களே இல்லை. இந்த லட்சணத்தில் 4 ரேஷன் கடைகளை பார்க்க சொன்னால் எப்படி முடியும். எடையாளர்களை நியமித்த பின் வேலை வாங்குங்கள் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us