ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்தல்
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்தல்
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்தல்
ADDED : ஜூலை 02, 2025 06:30 AM
உசிலம்பட்டி :தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் நடராஜன், சூசை மாணிக்கம் முன்னிலையில் நடந்தது.
மாவட்டத் தலைவராக இளஞ்செழியன், செயலாளராக பொற்செல்வன், பொருளாளராக சந்திரசேகரன், கூடுதல் தலைவராக அமல்ராஜ், மகளிர் அணிச் செயலாளராக பாண்டியம்மாள், கல்வி மாவட்டத் தலைவராக செல்வராணி, செயலாளராக அம்சராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்களாக அன்பழகன், மகேஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக சுப்பிரமணி, ஜெயலட்சுமி, காணிக்கைராஜ், சங்கர், மாவட்ட துணை பொறுப்பாளர்களாக ஆனந்த், போஸ், ராஜா, நவநீதகிருஷ்ணன், பாண்டியம்மாள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்பாடுகளை உசிலம்பட்டி வட்டாரச் செயலாளர் யோகராஜ் செய்திருந்தார்.