/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கடன் வாங்குவதில் தான் தமிழகம் முன்னிலை : அ.தி.மு.க., குற்றச்சாட்டு கடன் வாங்குவதில் தான் தமிழகம் முன்னிலை : அ.தி.மு.க., குற்றச்சாட்டு
கடன் வாங்குவதில் தான் தமிழகம் முன்னிலை : அ.தி.மு.க., குற்றச்சாட்டு
கடன் வாங்குவதில் தான் தமிழகம் முன்னிலை : அ.தி.மு.க., குற்றச்சாட்டு
கடன் வாங்குவதில் தான் தமிழகம் முன்னிலை : அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 28, 2025 12:22 AM
மதுரை: வளர்ச்சியில் இல்லை; கடன் வாங்குவதில்தான் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது என அ.தி.மு.க., மருத்துவரணி இணை செயலாளர் சரவணன் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது:
'தமிழகத்தில் ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமையும்' என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஏழு ஜென்மம் எடுத்தாலும் இனி தி.மு.க., ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் தேர்தல் வியூகங்களை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டாலின் தவிக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் அ.தி.மு.க.,வை தொடர்ந்து விமர்சிக்கிறார்.
தி.மு.க.,வில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது அக்கட்சிக்கு ஓட்டு வங்கி குறைந்துவிட்டதையே காட்டுகிறது. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு அலர்ஜி வந்துவிட்டது. இதனால்தான் கட்சியினருடன் ஒன் டூ ஒன் மீட்டிங் நடத்துகிறார். அ.தி.மு.க., 10 ஆண்டுகளாக ஏற்படுத்திய கட்டமைப்பைத்தான் தற்போது தி.மு.க., பின்பற்றுகிறது.
எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது என்கின்றனர். கடன் வாங்குவதில்தான் தமிழகம் முன்னிலையில் உள்ளது. ஈ.வெ.ரா., அண்ணாதுரை குறித்து பேசிய காலம் போய், தற்போது உதயநிதி, இன்பநிதி தி.மு.க.,வாக மாறிவருகிறது. இவ்வாறு கூறினார்.