Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விவசாயிகளை ஏமாற்றி நிறுவனங்களை பாதுகாக்கும் தமிழக அரசு: சங்கம் சாடல் விவசாயிகள் சங்கம் சாடல்

விவசாயிகளை ஏமாற்றி நிறுவனங்களை பாதுகாக்கும் தமிழக அரசு: சங்கம் சாடல் விவசாயிகள் சங்கம் சாடல்

விவசாயிகளை ஏமாற்றி நிறுவனங்களை பாதுகாக்கும் தமிழக அரசு: சங்கம் சாடல் விவசாயிகள் சங்கம் சாடல்

விவசாயிகளை ஏமாற்றி நிறுவனங்களை பாதுகாக்கும் தமிழக அரசு: சங்கம் சாடல் விவசாயிகள் சங்கம் சாடல்

ADDED : மே 29, 2025 01:54 AM


Google News
மதுரை: 'காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மகசூல் இழப்புக்கான காப்பீட்டுத் தொகையை வழங்காமல், நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளுக்கான தொகையை பட்டுவாடா செய்யாத தனியார் நிறுவனத்தை தமிழக அரசு பாதுகாத்து விவசாயிகளைஏமாற்றுகிறது,' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டமைப்பு மாநிலத் தலைவர்பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், நான்காண்டு காலமாக பயிர் காப்பீட்டு திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது. தி.மு.க.,வின் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பயறு, உளுந்து போன்றவற்றை மத்திய அரசு மூலம் மாநில அரசு கொள்முதல் செய்யும் திட்டம் உள்ளது. ஆனால் குறைந்தபட்ச இலக்கீடு நிர்ணயித்து விளைபொருள் முழுவதையும்கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுக்கிறது.

விவசாயிகளுக்கு ஆத்மா திட்ட நிதி ஒதுக்கீடுஉரியமுறையில் சென்றடையவில்லை. சாகுபடி பரப்பளவில் 20 சதவீத நிலப்பரப்புக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு திட்டம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 35 லட்சம் எக்டேரில் நெல் உற்பத்தியாகிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல்மையம் செயல்பட்டு வந்தது. தற்போது தேசிய நுகர்வோர் கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதலில் ஈடுபடாமல் தனியார் நிறுவனம் தான் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் குறித்த விவரங்கள் கூட நுகர்பொருள் வாணிப கழக பட்டியலில் இல்லை.

வட மாவட்டங்களில் இம்முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்து கொண்டு ரூ.600 கோடி வரை தராமல் நிறுவனம் ஏமாற்றி வருகிறது. விவசாயிகளை பாதுகாக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது. நிதி ஒதுக்கீடின்றி அறிவிக்கப்படும் திட்டங்கள் விளம்பர திட்டங்களாகவே உள்ளன.

முதல்வர் ஸ்டாலின், தன்னைத்தானே பாராட்டிக்கொள்வதையும் விவசாயத்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பொய் பிரசாரம் செய்வதையும் விவசாயிகள் ஏற்கவில்லை. இதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us