/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சமூகவியல் துறைக்கு மூடுவிழா கலெக்டருக்கு மாணவர்கள் மனு சமூகவியல் துறைக்கு மூடுவிழா கலெக்டருக்கு மாணவர்கள் மனு
சமூகவியல் துறைக்கு மூடுவிழா கலெக்டருக்கு மாணவர்கள் மனு
சமூகவியல் துறைக்கு மூடுவிழா கலெக்டருக்கு மாணவர்கள் மனு
சமூகவியல் துறைக்கு மூடுவிழா கலெக்டருக்கு மாணவர்கள் மனு
ADDED : ஜூன் 08, 2025 03:56 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி முதலாம், இரண்டாம் ஆண்டு சமூகவியல் துறை மாணவர்கள் கலெக்டருக்கு அனுப்பிய மனு:
இங்கு தமிழ்வழியில் சமூகவியல் துறை இயங்குகிறது. அரசு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாக உள்ளது. இது இக்கல்லுாரியில் 2023-24 ல் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது.2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில் சமூகவியல் துறை இடம்பெறவில்லை. போதிய வகுப்பறைகள் இல்லை எனக்கூறி சமூகவியல் துறையை மூடும் வகையில் மாணவர் சேர்க்கையை நிர்வாகம் நிறுத்திவிட்டது. தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி மாணவர் சேர்க்கையை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.