ADDED : செப் 21, 2025 04:47 AM
மேலுார்: மதுரை இறையியல் கல்லுாரி மாணவர்கள் பேராசிரியர் அட்லீன் தலைமையில் 30 பேர் அரிட்டாபட்டியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ் கல்வெட்டுக்கள், சமணர் படுக்கைகள், குடைவரை கோயில்,ராஜாளி கழுகு, மற்றும் பாரம்பரிய பல்லுயிர் தளங்களை ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கு ஏழுமலைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கருப்பணன், விமலா சூழலியல் செயற்பாட்டாளர்கள் பக்ருதீன் அகமத், செல்வராஜ் விளக்கினர்.