/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
ADDED : ஜூன் 17, 2025 12:36 AM
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இருவரது வீடும் அருகருகே உள்ளன. ஒரு மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்து அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளார். அவரை பெற்றோர் அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பஸ் ஏறுவதற்காக பஸ் ஸ்டாப்புக்கு வந்த மாணவி, பக்கத்து வீட்டு தோழியிடம் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
'நீ விஷம் குடித்தால் நானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்' என பக்கத்து வீட்டு மாணவியும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் அந்த ஊரில் உள்ள பெட்டிக்கடையில் எறும்பு பொடி பாக்கெட்டை வாங்கி தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். பின்னர் இருவரும் பள்ளிக்கு பஸ்சில் சென்றுள்ளனர். பள்ளியின் நுழைவு வாயில் அருகே சென்ற போது இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மாணவிகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.