ADDED : ஜன 06, 2024 06:08 AM
திருமங்கலம்: கள்ளிக்குடி - விருதுநகர் ரயில்வே பாதையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குராயூர், மொச்சிகுளம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாதையில் ரயில்வே நிர்வாகம் அண்டர் பாஸ் பாலம் அமைத்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரோடு படுமோசமாகிவிட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை. இதனால் 3 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு மாணவர்கள், பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நேற்று வகுப்புகளை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார், விருதுநகர் ரயில்வே போலீசார் சமரசம் செய்தனர்.