Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'தெருநாய்கள் என்றாலே கைவிடப்பட்டவை தான்'

'தெருநாய்கள் என்றாலே கைவிடப்பட்டவை தான்'

'தெருநாய்கள் என்றாலே கைவிடப்பட்டவை தான்'

'தெருநாய்கள் என்றாலே கைவிடப்பட்டவை தான்'

ADDED : மே 18, 2025 03:05 AM


Google News
மதுரை: ''தெரு நாய்கள் அனைத்தும் கைவிடப்பட்டவை தான். தமிழகத்தில் உள்ள தெருநாய்களை காப்பகங்களில் நிரந்தரமாக அடைத்து பராமரிக்க வேண்டும்'' என அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ரத்தினவேலு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நாய்கள் கூட்டமாக சேர்ந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுற்றுலா தலங்களில் வித்தியாசமாக உடையணியும் வெளிநாட்டவர்களை குரைத்துக் கொண்டே துரத்துவதால் தமிழகத்தை பற்றிய மதிப்பீடு குறைகிறது. நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்வதும் குறைவாக உள்ளதால் அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

மாநகராட்சி பகுதியில் மட்டும் 38ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன என மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2024 ல் நாய்க்கடிக்கு ஆளானோரின் எண்ணிக்கை 4.8 லட்சம், ரேபிஸ் வைரஸ் தாக்கியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 47 என்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான, ஊனமுற்ற நாய்களுக்கு கால்நடை மருத்துவ வசதிகளுடன் 72 காப்பகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தெரு நாய்கள் அனைத்தும் கைவிடப்பட்டவை தான். தமிழகத்தில் உள்ள தெருநாய்களை உடனடியாக பிடித்து காப்பகங்களில் நிரந்தரமாக அடைத்து பராமரிக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us