/உள்ளூர் செய்திகள்/மதுரை/'இரத்தவியல் அப்டேட்' மாநில கருத்தரங்கு'இரத்தவியல் அப்டேட்' மாநில கருத்தரங்கு
'இரத்தவியல் அப்டேட்' மாநில கருத்தரங்கு
'இரத்தவியல் அப்டேட்' மாநில கருத்தரங்கு
'இரத்தவியல் அப்டேட்' மாநில கருத்தரங்கு
ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இரத்தவியல் துறை சார்பில், 'இரத்தவியல் அப்டேட் 2024' என்ற மாநில கருத்தரங்கு நடந்தது.
மதுரை அரசு மருத்துவமனை டீன் தர்மராஜ் துவக்கி வைத்தார். டாக்டர்கள் நடராஜன், ஜவஹர், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ நிர்வாகி கண்ணன், இந்திய மருத்துவ சங்க செயலாளர் ஆனந்த செல்வகுமார் முன்னிலை வகித்தனர். முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.
இரத்தப் புற்றுநோய்கள் மற்றும் தலசீமியா, இரத்தச்சோகை, முதன்மை நோய் எதிர்ப்பாற்றல் பற்றாக்குறை போன்ற மரபியல் ரீதியான இரத்தக்கோளாறுகள் குறித்து விவாதித்தனர்.இரத்த புற்று நோயியல் துறைத் தலைவர் காசி விஸ்வநாதன் கூறியதாவது: குறிப்பிட்ட சில இரத்தக் கோளாறுகள், இரத்தப் புற்றுநோய்களுக்கு குணமளிக்கும் சிகிச்சையாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளது. இதுவரை 400 க்கும் அதிகமான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது. இவற்றுள்ள தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 50 சதவீத எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளது என்றார்.