/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு பஸ்சில் கழன்று விழுந்த படிக்கட்டு அரசு பஸ்சில் கழன்று விழுந்த படிக்கட்டு
அரசு பஸ்சில் கழன்று விழுந்த படிக்கட்டு
அரசு பஸ்சில் கழன்று விழுந்த படிக்கட்டு
அரசு பஸ்சில் கழன்று விழுந்த படிக்கட்டு
ADDED : செப் 05, 2025 04:06 AM

உசிலம்பட்டி,: வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி வந்த அரசு டவுன் பஸ்சில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர்.
நேற்று மாலை 6:00 மணியளவில் அந்த பஸ் உத்தப்பநாயக்கனூர் வந்தது. பயணிகள் ஏறி இறக்கிய பின் புறப்பட தயாரான பஸ்சின் பின்புற படிக்கட்டில் கண்டக்டர் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலர் நின்றிருந்தனர்.
திடீரென படிக்கட்டு பஸ்சிலிருந்து கழன்று கீழே விழுந்தது. அதில் நின்ற மாணவர்களும், கண்டக்டரும் கீழே விழுந்தனர். அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டதால் டிரைவர் பஸ்சை எடுக்காமல் நிறுத்தியதால் லேசான காயங்களுடன் அவர்கள் தப்பினர். பிறகு பஸ்சை ஓரமாக டிரைவர் நிறுத்தினார். மாற்று பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர்.