மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நாள்
மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நாள்
மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நாள்
ADDED : மார் 25, 2025 04:50 AM

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் விளையாட்டு நாள் விழா நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்சிதர், ராமசுப்பிரமணியன் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பொன்னி வரவேற்றார். உடற் கல்வி இயக்குனர் அமுதா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் டி.ஆர்.ஓ., சுதர்சன் பரிசு வழங்கினார்.
ஓட்டப்பந்தயம், ரிலே, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், பேட்மின்டன், கேரம், கோ கோ, எரிபந்து உள்பட பல்வேறு போட்டிகளில் வென்ற 120 மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி தேவிகா தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். மஞ்சள் அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். பேராசிரியர் சத்யபிரியா நன்றி கூறினார்.