/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் நாளை பால்குடம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் குன்றத்தில் நாளை பால்குடம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
குன்றத்தில் நாளை பால்குடம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
குன்றத்தில் நாளை பால்குடம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
குன்றத்தில் நாளை பால்குடம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
ADDED : ஜூன் 08, 2025 04:02 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜூன் 9) நடக்கும் விசாக பால்குட திருவிழாவிற்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்ச் பகுதியிலும், மயில் மண்டபம் அருகிலும் பக்தர்கள் மேல் தண்ணீர் விழும் வகையில் 15க்கும் மேற்பட்ட ஷவர் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரத வீதிகளிலும், கிரிவலப் பாதையை சுற்றிலும் குடிநீர் வசதி உண்டு. அனைத்து ரோடுகளிலும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று நடமாடும் கழிப்பறை வாகனங்கள்நிறுத்தப்படுகின்றன. 25க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கழிப்பறைகளும் இலவசமாக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா தெரிவித்தார்.