/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கூடுதல் ஸ்டேஷன்களில் நிற்க வேண்டும் தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தல் நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கூடுதல் ஸ்டேஷன்களில் நிற்க வேண்டும் தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தல்
நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கூடுதல் ஸ்டேஷன்களில் நிற்க வேண்டும் தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தல்
நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கூடுதல் ஸ்டேஷன்களில் நிற்க வேண்டும் தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தல்
நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கூடுதல் ஸ்டேஷன்களில் நிற்க வேண்டும் தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2025 02:51 AM
மதுரை: நாகர்கோவில் 'அந்தியோதயா' ரயிலை கூடுதல் ஸ்டேஷன்களில் நிறுத்திச் செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் ரயிலில் பயணிப்பதை
ஊக்குவிக்க, முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட 'அந்தியோதயா எக்ஸ்பிரஸ்' எனும் இரவு நேர ரயில்கள், 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் 2018 மார்ச் 5ல் தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் இருமுறை இந்த ரயில் இயக்கப்பட்டது. போதிய வரவேற்பின்மையால் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. 2018 ஜூன் 9 முதல் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே 'தினமும்' இயக்கப்படும் ஒரே அந்தியோதயா ரயில் இது.
தாம்பரத்தில் இருந்து இரவு 10:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:35 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 3:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:50 மணிக்கு தாம்பரம் செல்கிறது. வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
குமரி - மங்களூரு இடையே கேரள மாநிலம் வழியாக 719 கி.மீ., பயணிக்கும் 'பரசுராம்' ரயில், 51 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
தமிழகத்தில் 764 கி.மீ., துாரம் பயணிக்கும் அந்தியோதயா ரயில், 15 ஸ்டேஷன்களில் மட்டும் நின்று செல்வதால் தென்மாவட்ட பயணிகளால் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
பயணிகள் தரப்பில் கூறியதாவது: கன்னியாகுமரி - சென்னை வழித்தடத்தில் செல்லும் நெல்லை, முத்துநகர், பாண்டியன் போன்ற முக்கிய ரயில்களில், டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
3 மாதங்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். பொதுப் பெட்டியிலும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
நினைத்த நாளில் பயணம் மேற்கொள்ள வரப்பிரசாதமாக 20 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. பஸ் கட்டணத்தை விடகுறைவு என்பதால் சென்னை செல்ல இந்த ரயிலை பயன்படுத்துகிறோம்.
முதலில் எக்ஸ்பிரஸ் ஆக இயங்கிய இந்த ரயில், 2022 ஏப்.,14 முதல்'சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் 10 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே வந்து காத்துக் கிடக்கிறது.
எனவே அதிகம் பேர் பயணிக்கும் வகையில், ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், கொடை ரோடு, மணப்பாறை, பாபநாசம், சுவாமிமலை, சீர்காழி, பண்ருட்டி, திண்டிவனம், மேல்மருவத்துார் உள்ளிட்ட ஸ்டேஷன்களிலும்நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.