Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிடக்கூடாதா

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிடக்கூடாதா

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிடக்கூடாதா

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிடக்கூடாதா

ADDED : ஜூன் 20, 2025 03:27 AM


Google News
மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே நடக்கும் அறுபடை வீடு அருட்காட்சியை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: அறுபடை வீடு அருட்காட்சிக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மாநாட்டில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் போன்றோர் கலந்து கொள்ளலாமா என அமைச்சர் சேகர் பாபு கேட்கிறார்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து யாரும் சாமி கும்பிட கூடாதா.

தமிழக முதல்வருக்கு பக்தி கிடையாது. அறநிலையத் துறையின் பணத்தை கோயிலுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். கும்பாபிஷேகம் நடத்துவது அரசின் கடமை.

முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்வதில் தவறில்லை. கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை முடித்த பின் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us