எதிர்ப்பு தெரிவித்தும் 'பார்' வசதி
எதிர்ப்பு தெரிவித்தும் 'பார்' வசதி
எதிர்ப்பு தெரிவித்தும் 'பார்' வசதி
ADDED : பிப் 25, 2024 04:02 AM
சோழவந்தான், : சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற கடந்த 2022 அக்.,2 கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுங்கட்சி நிர்வாகிகள் இந்த கடையை அகற்றக்கோரி கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தினர்.
அதே நிர்வாகிகள் தற்போது வேறு ஒருவர் பெயரில் அக்கடைக்கு பார் உரிமம் பெற்று நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.