ADDED : பிப் 25, 2024 05:08 AM
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியின் 25 வது ஆண்டு விழாவை குழந்தை ஏசு சர்ச் பங்குத்தந்தை மைக்கேல்ராஜ் துவக்கி வைத்தார்.
ஆசிரியர் தயாநிதி வரவேற்றார். தாளாளர் அருள்மாணிக்கம், நிர்வாகிகள் ரோஸ்சுமதி, ஜெயந்த் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலைச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
சவுராஷ்டிரா கல்லுாரி துணை பேராசிரியர் வசந்தகுமார், வங்கி மேலாளர் பாஸ்கரன், நிஜாமுதின் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் மனோஜ் நன்றி கூறினார்.