ADDED : செப் 09, 2025 04:15 AM

திருப்பரங்குன்றம்: மதுரையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகளில் சவுராஷ்டிரா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நாக் அவுட் முறையில் நடந்த இப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா கல்லுாரி அணி 55 -- 35 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்கன் கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றது. வீரர்களை கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், விளையாட்டுக் குழு உறுப்பினர்கள் கணேசன், பாலாஜி, செந்தில், ஜீவப்பிரியா, விஷ்ணுபிரியா, டீன் ஜெயந்தி பாராட்டினர்.