/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 50 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாப்டூர்--சந்தையூர் மலை ரோடு 50 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாப்டூர்--சந்தையூர் மலை ரோடு
50 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாப்டூர்--சந்தையூர் மலை ரோடு
50 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாப்டூர்--சந்தையூர் மலை ரோடு
50 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாப்டூர்--சந்தையூர் மலை ரோடு
ADDED : செப் 01, 2025 02:44 AM

பேரையூர்: பேரையூர் அருகே 50 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த சாப்டூர் -- சந்தையூர் மலை ரோடு திட்டத்தைக் கிடப்பில் போட்டதால் இப்பகுதி மக்கள் கவலையில் உள்ளனர்.
இத்திட்டத்திற்கு 1975ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ரோடு அமைக்க தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கின. சாப்டூர்- சந்தையூரில் இருந்து மலையடிவாரம் வரை ரோட்டுக்கான பாதை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பணிகள் நடக்கவில்லை.
1992 - -93 ல் மீண்டும் இத்திட்டத்திற்கு அரசு உயிர் கொடுத்தது. இந்தச் சாலை 5 கி.மீ., தொலைவுக்கு உள்ளது. தற்போது வரை முழுமையாக அமைக்கவில்லை. சேடப்பட்டி ஒன்றிய எல்லைக்குள் 2.5 கி.மீ., தொலைவுக்கும், டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 1.5 கி. மீ துாரத்திற்கும் சாலை அமைக்கப்பட்டது. இந்த 2 பகுதியிலும் சாலை அமைத்திருந்தாலும் அதற்கு நடுவே 1 கி.மீ., தொலைவுக்கு மலைப்பாதை சாப்டூர் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. அப்பகுதிக்கு அவர்களின் அனுமதி கிடைக்காமல் இந்த சாலை முழுமை அடையாமல் ஐம்பது ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் உள்ளது.
இந்த சாலை முழுமை அடைந்து பயன்பாட்டுக்கு வந்தால் இப்பகுதியில் விளையும் பருத்தி, நெல், கடலை பயிர்கள் விருதுநகர், தேனி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல துாரம் குறையும். இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதியினர் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் பலனில்லை. மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் செய்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
எனவே இந்த இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.