ADDED : ஜன 17, 2024 07:07 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைனில் முன் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை.
உசிலம்பட்டி பகுதி காளைகளுக்கு திட்டமிட்டு அனுமதிச் சீட்டு தர மறுக்கின்றனர் என, காளைகளுடன் திரும்பி வந்த உரிமையாளர்கள் தேவர் சிலை அருகே தங்கள் காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உரிய அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள் எனக்கூறி போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.
இதனால் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.


