/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம் கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம்
கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம்
கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம்
கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம்
ADDED : ஜூன் 27, 2025 05:32 AM
மதுரை:மதுரையில் சுபம் அமைப்பு சாரா கட்டடத் தொழிலாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் எம்.சுப்புராம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் கலையரசி, செல்வராணி, செயலாளர்கள் விஜயகுமார், முகம்மது செர்ஷா முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். பொருளாளர் சாராள்ரூபி நன்றி கூறினார்.
கூட்டத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல், கிளைம் செய்வது போன்ற நேரங்களில் எழும் இணைய சர்வர் பிரச்னைக்கு தீர்வு காண்பது, வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ததை நிராகரிக்கும் வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தீர்மானங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிடில், ஒரு மாத அவகாசத்திற்கு பின் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.