/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'தோண்டிய ரோடுகளையே தோண்டுகின்றனரே' வரிப்பணம் வீணாவதாக குடியிருப்போர் குமுறல் 'தோண்டிய ரோடுகளையே தோண்டுகின்றனரே' வரிப்பணம் வீணாவதாக குடியிருப்போர் குமுறல்
'தோண்டிய ரோடுகளையே தோண்டுகின்றனரே' வரிப்பணம் வீணாவதாக குடியிருப்போர் குமுறல்
'தோண்டிய ரோடுகளையே தோண்டுகின்றனரே' வரிப்பணம் வீணாவதாக குடியிருப்போர் குமுறல்
'தோண்டிய ரோடுகளையே தோண்டுகின்றனரே' வரிப்பணம் வீணாவதாக குடியிருப்போர் குமுறல்
ADDED : மே 26, 2025 02:23 AM

மதுரை:மதுரை மாநகராட்சி 73வது வார்டு டி.வி.எஸ்., நகரில் அடிக்கடி தோண்டப்படும் ரோடுகள், சாக்கடை கலந்த குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளால் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.
டி.வி.எஸ்., நகரில் லட்சுமி, ராஜம், கிருஷ்ணா, சந்தானம், துரைசாமி தெருக்களில் 900க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளோர் பிரச்னை குறித்து டி.வி.எஸ்., நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் மோகனசுந்தரம், துணைத் தலைவர்கள் முரளி, ஹரி, செயலாளர் ஜோதிமாதவன், இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் பாரதிராஜ், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், சண்முகம், நடராஜ் குமார், விஜயகுமார், கணேஷ் கூறியதாவது:
குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரோடுகளை தோண்ட, குழாய் பதிக்க, தோண்டிய ரோடுகளை மூட, ரோடு அமைக்க என தனித்தனி ஒப்பந்ததாரர்கள் செயல்படுகின்றனர்.
ரோடுகளைத் தோண்டி குழாய் பதித்து இணைப்புக் கொடுப்பதற்குள் புதிய ரோடு அமைத்துவிடுகின்றனர். இதனால் பல வீடுகளில் குடிநீர் கிடைப்பதில்லை. புகாரையடுத்து மீண்டும் ரோடுகளைத் தோண்டுவதால்மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
ரோடுகளை அவசரகதியில் அமைப்பதால்துண்டுதுண்டாக பெயர்கின்றன. ராஜம் தெருவில் புதிதாக அமைத்த ரோட்டின் பல இடங்களில் கனரக வாகனங்களால் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்குகிறது.துரைசாமித் தெருவதை்தோண்டிய நிலையில் பணிகள் முடிந்தும் புதிய ரோடு அமைக்கவில்லை.
சந்தானம் தெருவில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் கழிவுகள் அகற்றப்படவில்லை.குவிந்துள்ள இடிபாடுகள் பாம்புகளின் புகலிடமாக மாறியுள்ளது.
நடுவழியில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பலமுறை புகாரளித்தும் பயனில்லை. பழங்காநத்தம் போஸ்ட் ஆபீசுக்குவருவோர் டூவீலர், ஆட்டோவைநிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருட்டு பயம்
தெருவிளக்குகளின் வெளிச்சம் ரோடு முழுமைக்கும் இல்லாததால்திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
35 சி.சி.டி.வி., கேமராக்கள் புதிதாக அமைக்க வேண்டியுள்ளது.மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை பிடித்துச் சென்று கருத்தடை செய்தபின் வேறு இடங்களில் விடுகின்றனர்.
அதுபோல் வேறு பகுதி நாய்களை இங்கு விடுவதால் நாய்களுக்குள் சண்டை ஏற்படுவதுடன், வெறிபிடித்து மக்களை கடிக்கின்றன. நாய்களை கருத்தடைக்குப் பின்அந்தந்தப்பகுதியில் விட வேண்டும்.
குடிநீரில் கழிவுநீர்
முத்துப்பட்டி கண்மாய்கழிவுநீர் தேங்கி, புதர்மண்டி கிடப்பதால்குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. இப்பகுதி நிலத்தடி நீராதாரமாக உள்ள கண்மாயை துார்வாரி கரைகளை மேம்படுத்திநிரந்தரமாக நீர்தேக்க வேண்டும்.
இதன்மூலம் 2 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். பூங்காவில் திறந்த வெளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு கூரை, செயற்கை நீரூற்று, புதிய பெயர் பலகை அமைக்க வேண்டும். பூங்கா நேரம் முடிந்த பின்பும் சிலர் வேலிதாண்டி ஊடுருவதால் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும்.
செயல்படாத மருந்தகம்
இப்பகுதிகளில் மழைநீர் வடிகால் சரிவர அமைக்கப்படாமல் குப்பை சேர்ந்துள்ளது. டி.வி.எஸ்., நகருக்குள் பஸ்கள் வராததால் பல கி.மீ., சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது.
மினி பஸ்கள் விட வேண்டும். வேகத்தடைகளில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும்.
டி.வி.எஸ்., நகர் ரயில்வே மேம்பாலத்தில் இளைஞர்கள் டூவீலரில் சாகசம் செய்வதால், பாலத்தின் இரு முனைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். திறக்கப்பட்ட நாளில் இருந்து பூட்டியே கிடக்கும் முதல்வர் மருந்தகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், என்றனர்.