ADDED : ஜன 19, 2024 05:09 AM
மதுரை: மதுரை என்.எம்.எஸ்., நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராபர்ட் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
செயலாளர் ஜெயக்கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இலந்தைக்குளம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
கவுரவ ஆலோசகர் சபாரத்தினம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஸ்ரீராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தலைவர் உக்கிரபாண்டி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடினர். செயலாளர் சண்முகபெருமாள் முன்னிலை வகித்தார்.
விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இணைச்செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


