ADDED : செப் 20, 2025 04:08 AM
மதுரை:' தோட்டக்கலைத்துறை சார்பில் சாத்தையாறு உபவடி நிலப்பகுதிக்குட்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் உலக வங்கிக் குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரை மேற்கு பொதும்பு கிராம வாழை விவசாயி கோவிந்தராஜன் தோட்டத்தில் வேளாண் ஆய்வாளர் சாருலதா ஷர்மா, சுற்றுச்சூழல் நிபுணர் ஜூடித் டிசில்வா ஆய்வு செய்தனர். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா, உதவி இயக்குநர் ஜனரஞ்சனி உடனிருந்தனர்.